Professional Events
திருச்சியின் புதிய அடையாளமாக மாறும் திருச்சி வர்த்தக மையம் ! புதிய தலைவர் மு.முருகானந்தம் நம்பிக்கை!
திருச்சி வியாபாரிகள் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்திற்காக கடந்த (21.02.2020) ஆம் வருடம், இந்திய நிறுவன சட்டத்தின் படி தொடங்கப்பட்ட நிறுவனம் திருச்சி டிரேட் சென்டர் பிரைவேட் லிமிடெட். இந்த TRICHY TRADE CENTRE நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் TRICHY TRADE CENTRE கட்டுவதற்காக கடந்த (30.12.2021) ஆம் வருடம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு, திருச்சி திண்டுக்கல் அரைவட்ட சாலை இணைப்பு ஏற்படுத்துவதில் தாமதமானதால் TRICHY TRADE CENTRE கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் மேற்கொண்டு அதற்கான வேலைகள் நடைபெறாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் தலைமையில் அடுத்த 18 முதல் 24 மாதத்திற்குள் திருச்சியில் மிகப் பிரம்மாண்டமாக TRICHY TRADE CENTRE சென்டர் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிட்கோ நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இணைந்து, 9,42 ஏக்கர் பரப்பளவு இடத்தில் 50,000 சதுர அடியில் ஏறக்குறைய 11 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் TRICHY TRADE CENTRE, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல் இணைப்பு சாலையில் உருவாகப் போகிறது இந்த TRICHY TRADE CENTRE மூலம், தொழில் மாநாடுகள், கண்காட்சிகள், விற்பனையாளர்கள் கூட்டம், பொருட்காட்சிகள் ஆகியவை நடத்தப்படுவதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயன்பெற முடியும்.
மாறு..!! மாற்று..!!
RIDE Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Director - Rotary International (2025-27)
Chairman- Excel Group of Companies
#MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel