Professional Events

நறுமண பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

26 January 2025 Trichy

திருக்காட்டுப்பள்ளி சர் சிவஸ்வாமி அய்யர் மேல்நிலைப்பள்ளி' வளாகத்தில் நறுமண பயிர்கள் சாகுபடி, நறுமண எண்ணெய் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது .மத்திய மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராமேஸ்வரம் வெட்டிவேர் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த முகாமில் எக்ஸெல் குழும நிறுவனங்கள் தலைவர், MMM Trichy , தலைவர்- Trichy Trade Centre Er.முருகானந்தம்.ம(MMM) தலைமை வகித்தார். வெட்டிவேர் பயிர் சாகுபடியில் Excel Agro நிறுவனத்தின் ஆர்வத்தையும்பங்களிப்பையும்எடுத்துரைத்தார். இந்த விழிப்புணர்வு முகாமில் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் பூண்டி வெங்கடேசன், பள்ளி அறக்கட்டளை தலைவர் கரும்பேஸ்வரன் முன்னிலை வகித்தனர். முகாமில் பெங்களூரு சிஎஸ் ஐஆர் மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவர ஆராய்ச்சி நிறு வன முதன்மை விஞ்ஞானி சுந்தரேசன், திருப்பத்துார் சிஎஸ்ஐஆர் அரோமா மிஷின் பயனாளி விவசாயி வெட்டிவேர் பாண்டியன்,டிவிஎஸ் துரைசாமி, ராமேஸ்வரம் வெட்டிவேர் மற்றும் சுற்றுசூழல் அறக்கட்டளை ஸ்ரீ ராம் நாத் உள்ளிட்டோர் உரையாற்றினர

Copyright © All rights reserved |   MMMtrichy.com