Rotary Events

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக தமிழர் தேர்வானது தமிழருக்குக் கிடைத்த பெருமை;
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் ரோட்டரி பன்னாட்டு இயக்குனராக தமிழனாகிய எம். முருகானந்தம் தேர்வாகி இருப்பது நமக்கு பெருமை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். உலக அளவில் இயங்கி வரும் ரோட்டரி சங்கங்களுக்கான பன்னாட்டு இயக்குனராக திருச்சியை சேர்ந்த எம்.முருகானந்தம் தேர்வாகியுள்ளார். தொழிலதிபரான இவர் எக்ஸெல் குழுமங்களை நடத்தி வருகிறார். இவருக்கு ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் பாராட்டு விழா, மதுரை வேலம்மாள் ஐடாஸ் கட்டர் அரங்கில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார். ரோட்டரி பன்னாட்டு முன்னாள் இயக்குனர் கரூர் பாஸ்கர் சொக்கலிங்கம், வருங்கால ஆளுநர்கள் ஆர்.ராஜா கோவிந்தசாமி, பெரம்பலூர் கார்த்திக், திருச்சி ஆர்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அப்போது காணொளி மூலம் வாழ்த்திப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ரோட்டரி சங்கம் உலகம் முழுவதும் சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. சமூக சேவையை பிரதான நோக்கமாகக் கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். 'சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் கல்விதான் அதற்கு ஆகச் சிறந்த ஒரே வழி.!' கல்வி சார்ந்து பள்ளிகளுக்கு பல்வேறு நலப் பணிகளை ரோட்டரி சங்கம் சிறப்பாக செய்து வருகிறது. உலக அளவில் இயங்கும் ரோட்டரி சங்கத்திற்கு, இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில், ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக தமிழரான திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் இருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை " என்று வாழ்த்திப் பேசினார். இந்த பாராட்டு விழாவில், மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரோட்டரி 3000 சங்க உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பெரிய விழாவாக நடத்தப்பட்டது.

மாவட்டம் 3000த்தின் இரண்டாம் முறையாக ஒரு வரலாற்று நிகழ்வு
நமது மாவட்டத்தில் இருந்து பன்னாட்டு ரோட்டரி இயக்குநராக நமது மாவட்டத்தின் பெருமை Rtn.பாஸ்கர் அவர்களைத் தொடர்ந்து கின்னஸ் சாதனை நாயகன் Rtn.முருகானந்தம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைப் பாராட்டும் வரலாற்று நிகழ்வில் நாம் அனைவரும் திரள்வோம்... சாதனை மன்னனின் பாராட்டு விழாவை .... சாதனை விழாவாக்குவோம் ... வாருங்கள் .... வரவேற்று மகிழும்.... Rtn.மணிகண்ட ஆனந்த் Rotary Thuraiyur Perumalmalai Rtn.கார்த்திகேயன் Rotary Manaparai Rtn.செல்வகுமார் Rotary Chinnamanur Rtn.ராஜ்குமார் Rotary Trichirappalli North Social Media Committee RID Felicitation

RID 3201: DTA Blossom: Rotary Leadership Excellence Awards Conferment CIT Coimbatore
RI District 3201 has Conferred The Rotary Leadership Excellence Awards 2024 to Dr G Bakthavathsalam, Chairman & MD of KG Hospital , Mr K Srinivasan, Chairman & MD Emerald Group, Mr Hemachandran CEO MTHPL, Mr Lakshmanan Chairman & MD Shanthi Group, Mr Hemachandran Nair & Mr Ananda Rao ,Indian World Cup players to honor & celebrate the dedication of these exceptional leaders... I deem it a privilege to present awards to the Stalwarts in their respective fields, for their exemplary leadership skills, & ability to inspire others. Hearty Congratulations & Big thanks for your Inspiring Leadership.!! The event was well Organized Hats Off to DGE AKS Sundaravadivelu, DLF PDG Jose Chacko ,DG Vijayakumar ,DGS Subramaniam & CDC Padmakumar.

RID 3000: 26th Installation Ceremony of RC Dindigul Queen City
Installation Ceremony is an annual event hosted to celebrate the installation of the new office bearers of the club in their respective portfolios to kick-start with renewed vigor & enthusiasm. Congratulations to Pres Rtn Aun , Sec Rtn Amrita & the 23-24 team for taking the club to its heights.!! Best wishes to PE Rtn Kavitha ,SE Rtn Parkkavee & team for doing exemplary service during the RY 24-25 The Magic of Rotary. Embrace DEI @ Rotary Celebrate Diversity, Promote Equity & Welcome Inclusion in all your endeavors.

RID 3234 : District Training Assembly
District Training Assembly (DTA) is a learning opportunity designed to prepare club leaders for the rotary year ahead. I am happy to enlighten the Rotarians of the New District 3234 of Zone V with Zeal & Zest.!! Congratulations A special commendation goes out to DGE Rtn Saravanan, DTA chair Rtn Rajasekaran , Sec Rtn Sapthagiri & the entire team for their efforts in ensuring the event's success.!! Special mention to Dist Mentor PRID A.S Venkatesh, DLF PDG Sridhar,Dist Counselor PDG AKS Sv.Rm.Ramanathan & DA PDG J.B Kamdar. Hats off to your passion & commitment to service.