Rotary Events

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிளைச் செயலாளர்களுடன் சிறப்புக் கூட்டம்

03 November 2020 Trichy

நாளை நமதே..!! பொதுச் செயலாளர் திரு M முருகானந்தம் (MMM Trichy) அவர்கள் தலைமையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிளைச் செயலாளர்களுடன் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் அவர்கள் தமிழகம் கடந்த 40 ஆண்டுகளாக ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்களின் ஆட்சியினால் அடிப்படை சுகாதாரம், அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் பின்தங்கியுள்ள நிலைமையை சுட்டிக்காட்டி, 2021 தேர்தலில் நம்மவரின் தலைமையில் ஆட்சியமைத்து தமிழகத்தை புனரமைக்க அனைவரும் ஒன்று கூடி துரிதமாக பணிபுரிய வேண்டும் என்று ஊக்கமளித்துப் பேசினார். இக்கூட்டத்தில் நற்பணி மாவட்ட செயலாளர்கள் திரு சாகுபர் சாதிக், திரு ஜானி பாஷா, கட்டமைப்பு நகரச் செயலாளர்கள் வழக்கறிஞர் திரு ஸ்வாமிநாதன், திரு V ஆனந்தகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் திரு சூரியூர் சக்தி அவர்கள் கலந்து கொண்டார். நம்மவரின் தலைமையில் #தலைநிமிரட்டும்தமிழகம் மாறு..!! மாற்று..!! #MMMTrichy MNM HQ3


மாறு..!! மாற்று..!!
Rtn AKS Er M.Muruganandam (MMM)
BE., M.B.A., M.S., MFT., PGDMM., DEM
Chairman- Excel Group of Companies #MMMRotary #SayYEStoRotary #MMMTrichy #MMMExcel

Copyright © 2024 - All rights reserved |   MMMtrichy.com